போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட முயற்சித்த போது அதில் பயணித்தவர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
பின்னர் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் முதற்கட்ட விசாரணைகளில் அவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.