மக்களின் வருவாய் குறைகிறது, அரசின் வரி அதிகரிக்கிறது!

Share

நாட்டில் மக்களைப் பொறுத்த மட்டில் அவர்களது வருவாய் குறைந்து கொண்டு செல்கின்றது.வேலை வாய்ப்புகளும் குறைந்த வண்ணம் உள்ளது. ஆனால், அரசின் வரிகள் அதிகரிக்கின்றது என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் தெரிவித்தார்.

மக்களின் வரிச்சுமை தொடர்பாக கருத்துரைக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்

எரிபொருள்,எரிவாயு, மின்கட்டணம்,பெறுமதி சேர்வரி போன்றவை அதிரிக்கும்போது பொருட்களின் விலைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே மக்கள் குறைந்த வருமானத்தைக் கொண்டு,அதிகரித்த விலைவாசிகளைக் கொண்ட பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடுகின்றார்ள்.

இதனால் தொழிலாளர் வர்க்க,மத்திய தர வர்க்க மக்கள் பொருட் கொள்வனவின் அளவைக் குறைத்து வருகின்றனர். உணவுப் பொருட்களின் கொள்வனவு அளவுகள் குறைவதனால், குழந்தைகள் சிறுவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் மத்தியில் போசாக்கின்மை அதிகரிக்க,மந்த போசணையும் அதிகரிக்கின்றது.

இதனால், எதிர்கால சமூகம் வீரியமற்றுப் போவதற்கு வாய்ப்புள்ளது. ஆரோக்கியமற்ற எதிர்கால சமூகத்தினால் நாட்டின் உற்பத்தியை முன்னெடுப்பதில் இடையூறுகள் ஏற்படும். அத்துடன் போசணைக் குறைபாடுகள் மந்த போசணையால் பாதிக்கப்படும் எதிர்கால சமூகம் நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகும்போது சுகாதாரத் துறையின் செலவும் அதிகரித்துச் செல்ல வாய்ப்புள்ளது.

சர்வதேச ரீதியாக கடன்பட்ட அரசாங்கம், கடன்களைச் செலுத்துவதற்கு ஒரே வழியாக இருப்பது மக்கள் மீது விதிக்கப்படும் வரியாகவே இருக்கப்போகின்றது. பொருளாதாரக் குற்றவாளிகளை நீதிமன்றம் அடையாளம் காட்டியுள்ளது. அவர்களிடம் இருந்து மோசடி செய்த நிதிகளை அறவிடாமல், அப்பாவி மக்களிடம் இருந்து அதிகமாக வரி அறவிடுவது குற்றவாளிகளைப் பாதுகாத்து அப்பாவிகளைத் தண்டிப்பது போல் அமைந்துள்ளது.

வெளிநாடுகளில் சட்டவிரோதமாகப் பலர் 56 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பதுக்கியுள்ளதை அரசாங்கம் அறிந்திருக்கி ன்றது. இந்தப் பணத்தொகையினை நாட்டுக்கும் கொணர்ந்தால், நாட்டின் பொருளதார நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்பதை இலங்கை அரசங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஆளும் மேட்டுக்குடி அதிகாரவர்க்கம், பொருளாதாரக் குற்றவாளிகளான மேட்டுக்குடி வர்க்கத்தைப் பாதுகாக்கின்றதா? என்ற கேள்வி முனைப்படைகிறது.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதைப் போல வருவாயின்றி தவிக்கும் மக்கள் மீது மறைமுக வரிகளை விதிப்பது அமைந்துள்ளது. குற்றவாளிகளைத் தண்டிக்காமல் மக்களைத் தண்டிக்க நினைக்கும் இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் படுதோல்வி அடைவது உறுதியாகிவிட்டது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு