மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட தரத்தையுடைய ஒரு சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான இவர் கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்திருந்ததோடு இறுதியாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
குறித்த நியமனமானது இன்றைய தினம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் முன்னிலையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் இந்நியமணம் வழங்கி வைக்கப்பட்டது.