தனது காதலி தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான காதலன் கோமாகம பிரதேசத்தில் அதே க்கிட்டு உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுபுஸ்ஸல்லாவ – கம்பஹாவத்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது காதலிக்கு தொலை பேசியில் அழைப்பு விடுத்த போது காதலி பதிலளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது காதலியிடம் தான் உயிர்மாய்க்கப் போவதாக கூறி புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.