அம்பாறை – மஹாஓயா பகுதியில் கால்நடை பண்ணையொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பண்ணைக்கு அருகில் மறைந்திருந்த நால்வரை பிடிப்பதற்கு முயற்சித்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
மஹாஓயா பகுதியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.