நாளையதினம்(10) கிளிநொச்சியில் இடம்பெறும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரும் போராட்டத்தில் இணைவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது
பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினரால் நாளை(10) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது சங்கப் பணிமனைக்கு முன்பாக நீதிக்கான போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.