மாவீரர் நினைவேந்தலுக்கு சென்றவர்களை விசாரணைக்கு அழைத்த பொலிசார்!

Share

மட்டக்களப்பு தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் உட்பட நான்குபேரை பொலிஸார் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கடந்த 27ம் திகதி கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தலில பங்கேற்பதற்காக குறித்த நால்வரும் மோட்டர்சைக்கிளில் சென்று பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் வாழைச்சேனை ஊடகவியலாளர் ஒருவர் உட்பட 4 பேருக்கு கையடக்க தொலைபேசி ஊடாக மோட்டர்சைக்கிள் பிரச்சினை தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்துக்கு சென்றவர்களிடம் மோட்டர்சைக்கிள் பிரச்சினையை தவிர்த்து மாவீரர் நினைவேந்தலில் பங்கேற்றமை தொடர்பான வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

குறித்த நபர்கள் மாவீரார் துயிலும் இல்லத்திற்கு மோட்டர்சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு நினைவேந்தலில் பங்கேற்றி நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களின் இலக்கங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் எழுதி எடுத்துக் கொண்டு அதனை மோட்டர் போக்குவரத்து திணைக்களத்தற்கு அனுப்பி அந்த மோட்டர்சைக்கிளின் உரிமையாளரின் பெயர் முகவரியை பெற்று அதனை கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு பொய்யான பிரச்சனைகளை தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்துள்ளனர்.

இவ்வாறு பொலிசார் மாவீரர் நினைவேந்தல் முடிவுற்று இருவாரங்கள் சென்ற பின்பும் தொடர்ச்சியாக நினைவேந்தலில் பங்கேற்றியவர்களை பொய் கூறி வரவழைத்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பொலிசார் செயற்படுகின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு