அரசியலமைப்பின் பிரகாரம் ஆசிரியர் சேவையில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் வெளிநாட்டு மொழி பட்டதாரிகளை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு மாகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன் கல்வி அமைச்சரும் இதனைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.