மாவீரர்களை நினைவு கூறும் கார்த்திகை 27

Share

தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை இழந்த நாயகர்களின் – மாவீரர் தினமான இன்று (27.11.2023) நினைவுகூருவதற்குத் தாயகத்தில் மக்கள் தயாராகி வருகின்றனர்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்படுவதுடன் இன்று (27)மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அரச புலனாய்வாளர்களின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தின நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு