ஓர் இனத்துக்காக, இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும் இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிக்கும் செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் துக்க கரமான சம்பவமாக கருதுகின்றேன்.
ஓர் இனத்துக்காக இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும் இவ் இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிப்பதாகும்” – என்றார்.