நானுஓயாவில் 30 குடும்பங்களுக்கு வீடுகள்

Share

நுவரெலியா – நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த 30 குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இவ்வீடுகளை, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று (18) சனிக்கிழமை கையளிக்கப்பட்டன.

அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக ‘முகவரி’ வழங்கப்பட்டதோடு வீடுகளுக்கு முன்பாக வைப்பதற்கான தபால் பெட்டியும் வழங்கப்பட்டது.

நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வாழ்ந்துவந்த 30 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு திட்டங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எனினும் முழுமைப்படுத்தப்பட்ட வீடுகளே மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்றதன் அடிப்படையில் குடிநீர், மின்சாரம், வீதி உட்பட சகல உட்கட்மைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இதன்பிரகாரம் முழுமைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டம் கையளிக்கப்பட்டது.

அடைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இ.தொ.கா.வின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இ.தொ.கா.வின் பிரதி தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ராஜதுரை, தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி. சக்திவேல், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் இ.தொ.கா.வின் உப தலைவருமான பாரத் அருள்சாமி, உப தலைவர் பிலிப், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் ஆகியோருடன் பெருமளவான மக்களும் பங்கேற்றிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு