மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபடுவோரால் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது.
அண்மைக் காலங்களாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் பூர்வீக பகுதிகளான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மாடுகளை மேச்சலுக்கு விடும் தமிழ் பண்ணையாளர்கள் குறித்த சில சிங்கள இனத்தவர்களால் அச்சுறுத்தபடுகின்றனர்.
அதேவேளை கால்நடைகளை பொறி வைத்து பிடித்து வெட்டும் செயற்பாட்டிலும் அத்து மீறிய குடியேற்றவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு மேச்சலில் ஈடுபடும் மாடுகளை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யும் அட்டூழியங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
அதனையும் தாண்டி மாடுகளை கட்டிவைக்கும் பட்டிக்குள் உள்நுழைந்து சிங்கள பேரினவாதிகள் அங்குள்ள பொருட்களை நாசம் செய்து எரித்து விட்டு செல்வதாகவும் அதுகுள்ள மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.