புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருக்கு அஞ்சலி

Share

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான க.விஜயகுமார் அவர்கள் நேற்று (14) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புகள் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட இலங்கை அரசினுடைய அத்துமீறல் செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய முன்னாள் உறுப்பினருமான க.விஜயகுமார் அவர்கள் நேற்று (14) யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவருடைய உடலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு இன்று (15) மாலை இவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் இவரின் பூதவுடலுக்கு கட்சி கொடியினை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

https://youtu.be/4lqMN-PtY6Q?si=xql9wNXZnI-VBhwb

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு