கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Share

வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு