ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!

Share

ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.

நேற்றையதினம் (06.11.2023) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெடுங்கேணியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கி சென்ற ஹயஸ்ரக வாகனமும், ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து நெடுங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஒலுமடு நெடுங்கேணி பகுதியை சேர்ந்த 37 வயதுடைய பழனியாண்டி தியாகராசா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக ஹயஸ் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு