வவுனியா மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நேற்று (26) மாலை 4 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகவானது வவுனியா தெற்கு ஆசிரியர் ஆலோசகர் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு கல்வி பணிப்பாளர் சுரேந்திரன் அன்னமலர், சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் என். கமலதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளின் மங்கள விளக்கேற்றலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதல் நிகழ்வாக பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி , மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் . அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர்களின் உரை இடம்பெற்றது.
நிகழ்வின் தொடர்ச்சியாக வவுனியா மாவட்டத்தில் அதி உயர் சித்திகளை பெற்ற தமிழ் , சிங்களம் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு அதிதிகளால் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விசேடமாக மாவட்டத்தில் கணித பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் நடராசா நிசாந்தன் மற்றும் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் விமலராஜா விதுவர்சன் ஆகியோருக்கு நெல்லி ஸ்டார் விடுதி உரிமையாளர் தேவேந்திரராசா கிருஸ்னரூபன் தங்கப்பதக்கங்களை வழங்கி கௌரவித்திருந்தார்.
https://youtu.be/yyo4UC6BGH4?si=aNykgHAIOD4RATOr