அரச அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எழுபத்தைந்து ஆண்டுகளாக தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால்தான் நாடு மோசமான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
நாட்டை அதல பாதாளத்துக்குள் தள்ளியவர்களை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதால் நாடு இதைவிட மோசமான நிலைக்கே செல்லும்.
மீண்டும் ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும், எடுத்த தவறான முடிவுகளை மாற்றிக்கொள்வதாகவும் கூறுகின்றனர்.
தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பை மாற்றக் கூடிய ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.