புதுக்குடியிருப்பு ஆத்துப்பிலவு கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
மண்ணின் மரபையும் பண்பாட்டையும் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஆத்துப்பிலவு கிராம மக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆத்துப்பிலவு கிராமத்திலிருந்து க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்கள் இன்று (18) பிற்பகல் 2.30 மணியளவில் ஆதிபராசக்தி முன்பள்ளியில் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவாகிய 5 மாணவர்களும், சித்தியடைந்த 3மாணவர்களும் புலம்பெயர் வாழ் உறவான ராஜூ அவர்களின் நிதிப் பங்களிப்பில் அவர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் செல்வி மரியாம்பிள்ளை சர்மினி, கிராம சேவையாளர் தமிழ்செல்வன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், வி.பி.பவுண்டேசனின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், பொதுமக்கள் பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.