முல்லைத்தீவில் வீட்டு காணியிலிருந்து செல் மீட்பு!

Share

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீட்டு காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை உரிமையாளரினால் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் மோட்டார் செல் இருந்துள்ளதை கண்டுள்ளார்.

இதையடுத்து முல்லைத்தீவு பொலிசாருக்கு வீட்டுக்காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வெடிகுண்டினை நேற்றையதினம் (14) செயலிழக்க செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை முல்லைத்தீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு