மட்டக்களப்பில் மாடு வளர்க்கும் காணிகள் ஆக்கிரமிப்பு; சபையில் கூட்டமைப்பு எம்.பிகள் ஆர்ப்பாட்டம்

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

மட்டக்களப்பில் மாடு வளர்ப்பதற்காக மக்கள் பயன்படுத்திய காணிகளை வெளியாட்கள் சிலர் அபகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபையின் மத்தியில் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான எம்.பி.க்கள் குழு “அடிக்காதே, அடிக்காதே, எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு, எங்களைத் தாக்குவதை நிறுத்துங்கள், எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பி கொடுங்கள் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பார் என அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த அறிவித்ததையடுத்து கூட்டமைப்பு எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

https://youtu.be/5tjLx2ZglVQ?si=Fn31Fi9K853FkTxW

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு