பதவி விலகிய பின்னர் இலங்கையில் தங்கியிருக்க போவதில்லை-முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி

Share

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் பதவியில் இருந்து விலகிய தான் தொழில் வாழ்க்கையில் மாத்திரமல்லாது இலங்கையில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ளதாக முல்லைத்தீவு நீதவானும் மாவட்ட நீதிபதியுமான ரி.சரவணராஜா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி பதவியில் இருந்து விலகுவது தொடர்பான கடித்தை அனுப்பியுள்ளளேன்.

பதவி விலகல் கடித்தை நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பது எனது பாதுகாப்பு ஏதாவது செய்யவார்கள் என எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால், கடித்தை நீதி சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளேன்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சைகளுக்கு உள்ளான சில சம்பவங்கள் தொடர்பான வழங்கிய வழக்கு தீர்ப்புகளின் பின்னர் உயிருக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் நீதிபதி சரவணராஜா கூறியுள்ளார்.

அண்மைய காலத்தில் கூடிய கவனத்தை ஈர்த்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றன.

  • குருந்தூர்மலை விகாரை தொடர்பான வழக்கு நீதிபதி சரவணராஜா முன்னிலையில் நடைபெற்றது.

அதேபோல் கொக்குதொடுவாய் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புகைக்குழி தொடர்பான சம்பவம் குறித்த ஆரம்ப விசாரணைகளை சரவணராஜாவே நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் முல்லைத்தீவு நீதவான் அனுப்பியதாக கூறப்படும் பதவி விலகல் கடிதம் நீதியமைச்சுக்கோ அல்லது தனக்கோ கிடைக்கவில்லை எனவும் அது குறித்து தேடிப்பார்ப்பதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு