ஐனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ! 

Share

ஐனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்தவகையில், ஐனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று அக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச் சந்திரனின் யாழிலுள்ள இல்லத்தில் இன்று மாலை நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்து வரும் ஐனாதிபதித் தேத்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

இக் கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி, ஐனநாய போராளிகள் கட்சி, ஈபிஆர்எல்எப் அமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் செயற்பட்டு வந்திருந்த நிலையில் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பிரிந்துநின்று தேர்தல்களை சந்தித்தனர்.

இவ்வாறு தேர்தல்களில் பிரிந்து நின்ற இந்தக் கட்சிகளில் தமிழரசு கட்சி தனி அணியாகவும் ஏனைய கட்சிகள் வேறு பலரையும் இணைத்துக் கொண்டு புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.

ஆனாலும் நாடாளுமன்றத்தில் இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டு வந்த நிலையில் தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட முடியாது என்பதால் பிறிதொரு அணியாக செயற்பட தீர்மானித்திருக்கின்றனர்.

இதற்கமைய அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது தனி அணியாக செயற்படப் போவதாக சபாநாயகருக்கு அறிவித்தலை வழங்கிவிட்டு இனிமேல் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றில்லாமல் தனியான அணியாக செயற்படுவதென தீர்மானம் எடுத்துள்ளனர்.

அதே போன்று எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலின் போது தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை இறக்குவதெனவும் இதற்கமைய தமிழர் தரப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடாத்துவதெனவும் தீர்மீனித்துள்ளனர்

மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அனைத்து தரப்பினரும் இணைந்து சந்திப்பதற்கும் அவ்வாறு அனைவரும் ஒருமித்து சந்திப்பதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இவ்வாறு சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் அதற்கு முன்னெடுக்க நடவடிக்கைகள் தொடர்பிலும் அனைவருமாக இணைந்து ஆராய்ந்து சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு