உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி ரணில் தப்பிக்க பார்க்கிறார்

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது அரசாங்கத்தில் இருந்தவர்கள் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கும் போது சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு தவறிய குழுக்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களில் ஒருவர் என்பதனை கூற வேண்டும். உயர்நீதிமன்ற வழக்கு தீர்ப்பில் அவர் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முறையாக பாதுகாப்பு சபை கூட்டப்படவில்லை. பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு பிரதமரும் அழைக்கப்படவில்லை. தமது அரசியல் நோக்கத்திற்காக அதிகாரங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்கள் பொறுப்பு கூற வேண்டியவர்களே. அவர்களின் கட்சி அரசாங்கத்தையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. அவரின் கட்சி உப தலைவர் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்றார். எதிர்க்கட்சி பக்கத்தில் எனக்கு சில கதிரைகளுக்கு அருகில் இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி இந்த அரசாங்கத்தின் பங்காளியே.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இதில் பொறுப்புகள் உள்ளன. ஜனாதிபதி தனக்கு அதிகாரங்களை வழங்காவிட்டால் எதற்கு அந்தப் பதவியை வைத்திருக்க வேண்டும். இப்போதும் அப்படிதான் நாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை அவருக்கு ஜனாதிபதி பதவியே முக்கியம் என்று இருக்கின்றார் இதனால் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பிரதமரும் சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டும். அத்துடன் கோத்தாபய ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவரும் அரசாங்கத்திலேயே இருக்கின்றார். விசாரணை நடத்தும் அதிகாரிகளும் இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களே. இவ்வாறான நிலைமையில் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும். எவ்வாறாயினும் உண்மைகள் வெளியாகும் வரையில் மக்களின் பாதுகாப்பு நிச்சயமற்றதாகவே இருக்கும்.

சனல் 4 தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷ, கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளதுடன், பாதுகாப்பு செயலாளர் சனல் 4 தகவல்களை நிராகரித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் அனுமதியுடனா செயலாளர் அதனை நிராகரித்துள்ளார் என்று கேட்கின்றோம். அப்படியென்றால் எதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைப்பதாக கூற வேண்டும். இதனால் பாதுகாப்பு செயலாளரின் அறிக்கை எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வவுனதீவு சம்பவத்தை திசை திருப்பிய விசாரணை அதிகாரிகள் யார் என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். புலனாய்வு தகவல்களுக்கு அப்பால் இதனை வழிநடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச நாடுகளின் குழுக்கள் வந்தன. எப்போதும் தாக்குதலில் சர்வதேச ரீயிலான ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் என்று குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் புலனாய்வு அதிகாரிகள் எதற்கு ஐஎஸ் அமைப்பை பொறுபேற்குமாறு சின்ன சஹரானுக்கு கூறினார்கள் என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு