புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தக உரிமையாளர்களு க்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்றைய தினம்டபெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தில் வர்த்தக சங்க உரிமையாளர்களாக இருந்து இயற்கை எய்திய வர்த்தகர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வானது புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற நினைவு நிகழ்வில் வர்த்தகர்களின் குடும்பத்தினர்கள், சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன், வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி , மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
குறித்த அஞ்சலி நிகழ்வுக்கு புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் அனைவரும் கதவடைத்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.