உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும்

Share

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் அரசாங்கம் எவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டாலும் எதிர்கட்சி அதனை எதிர்க்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள போதிலும் திருத்தங்களுடன் அரசாங்கம் அதனை இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டதும் அதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்வதற்கு இரண்டுவாரங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமூலம்திருத்தப்பட்டாலும் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவேளை அது பொருத்தமற்றது என தெரிவித்து பல தரப்பினர் நீதிமன்றம் சென்றனர் சர்வதேச அளவிலும் அது நிராகரிக்கப்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு