நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர் உதிக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக சட்டம், ஒழுங்கு துறை அமைச்சர் டிரன் அலசிடம் இன்று கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடம்பெற்ற சம்பவங்களை ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக கருதி, விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என அமச்சரிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அமைச்சர் உறுதி வழங்கியதாகவும் கூறினார்.
இதுபற்றி தற்சமயம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கும் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தியதாகவும் கூறினார்.