தியாகதீபம் நினைவுசுமந்த ஊர்தி சிங்களவர்களின் முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்றுமுன்னர் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரையூடாக திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது
அப்போது சேருவல பகுதியில் வைத்து கல்வீசித் தாக்குவதற்கு சிங்களவர்கள் தயாராகியுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்த நிலையில் வெருகல் தாண்டிப் பயணிக்க முடியாத நிலையில் ஊர்தி தற்போது வெருகலில் தரித்து நிற்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.