முல்லைத்தீவு குடும்பஸ்தர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

Share

முல்லைத்தீவு – சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம்,10 பவுண் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்செல்லும்போது கொள்ளையர்களால் வீட்டின் உரிமையாளர் பொல்லால் தலையில் தாக்கப்பட்டு 63 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார் . இந்நிலையில் இவ் கொள்ளை, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு கள்ளபாடு பகுதிகளினை சேர்ந்த 27, 26 வயதுடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 21 ஆம் திகதிவரை தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றைய நபர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/BvAyb0oDg8E?si=-yZc8QRX_PaouFvE

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு