பணத்துக்காக புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான், தற்போது இந்த பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்களை பிள்ளையானின் வலது கையாக இருந்தவரே வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட நியாயமான காரணம் உள்ளது.
பிள்ளையான என்பவர் பிரபாகரனுடன் இருந்தவர், அந்த அமைப்புடன் இணைந்து செயற்பட்டுவிட்டு, தமது தனிப்பட்ட தேவைகளுக்காக அந்த அமைப்பை காட்டிக்கொடுத்தவர்தான் பிள்ளையான்.
பிரபாகரின் செயலை நாம் சரியென கூறவரவில்லை, தமக்கு தனி இராஜ்ஜியமாக இருக்க வேண்டும் என பிரபாகரன் நம்பினார். பிரபாகரனுடன் இணைந்து தனி நாட்டுக்காக போராடியவர்தான் பிள்ளையான். அவ்வாறு போராடிய நபர் பணத்துக்காக தனது தலைவரை காட்டிக்கொடுத்தார்.
பிள்ளையானின் இந்த செயல், எமக்கு (சிங்கள மக்களுக்கு) வீரச்செயலாக தெரியலாம். பணத்துக்காக உளவு தகவல்கள், உபாயங்களை அரசுக்கு வழங்கினார். ஒன்றாக இருந்த தனது தலைவரையே காட்டிக்கொடுத்த அந்த நபர் (பிள்ளையான்) எம்முடன் இணைந்ததால் அவரின் இந்த நடத்தை மாறுமா?
பிள்ளையானுக்கு வலது கரமாக இருந்தவர்தான் தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளார். பிள்ளையான் சிறையில் இருக்கும்போது, முஸ்லிம் அடிப்படைவாதிகளை சந்தித்து, கோட்டாவை வெற்றிபெற வைப்பதற்காக இந்த திட்டத்தை தீட்டினார் என அவர் கூறியுள்ளார். என்றார்.
https://youtu.be/BvAyb0oDg8E?si=qb6ufqcOpIxgolUY