ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைந்து செயற்பட போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தமது அரசியல் எதிர்காலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதன்போது கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்றைய தினம் கட்சி தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், குறித்த கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/8dPabHE_aNo?si=xIIA-DTrXCmPfDiS