மட்டக்களப்பு புதூர் சேத்துக்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாள்வெட்டு சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவமானது இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணமாகவே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
வாழ்வெட்டிற்கு இலக்கான நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.