மன்னார் நானாட்டான் அருள் மிகு ஸ்ரீ செல்ல முத்து மாரி அம்மன் ஆலயத்தில் இசைப்பேராசிரியரும் தென்னிந்திய பாடகருமான மாசிலாமணி தேவபாலன் தலமையில் இசைக்கச்சேரி நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தினை பூர்வீக இடமாக கொண்ட மாசிலாமணி – தேவபாலன் (திருச்சி தேவா) 35 வயதில் 36விருதுகளை பெற்ற சஹானா நுண்கலை கல்லூரியின் ஸ்தாபகராகவும் இருந்து செயற்பட்டு வருகின்றார்.
தமிழ் இசை விருந்து வழங்கியவர்களில் சஹானா நுண்கலைக்கல்லூரி மாணவி ஜெயசீலன் ஜென்சியா (முருங்கன்) மற்றும் . பின்னணி இசை வழங்கியவர் சகாயசீலன் சூர்யா குரூஸ் ( தாழ்வுபாடு).
மேலும் நிகழ்ச்சி இறுதியில் ஆலய நிர்வாகத்தினரால் கலைமாமணி வாழ்நாள் சாதனையாளர் மூத்த கலைஞர் செ.மாசிலாமணி அவர்களின் கலைவாரிசு தேவபாலனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.