“பௌத்தர்களே எழுந்திருங்கள்” குருந்தூர்மலை பொங்கலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்!

Share

குருந்தூர் மலை ஐயனார் கோவிலில் நாளைய தினம் (18) தமிழர்களின் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் இதற்கு எதிராக சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழர்களின் இந்த பொங்கல் வழிபாட்டை தடுக்க சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை நோக்கி வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்தில் உள்ள சிங்கள கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சிங்கள பௌத்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டியில் “பௌத்தர்களே எழுந்திருங்கள்”, “குருந்தி நிலத்தை காப்பாற்றுவோம்” “ஓகஸ்ட் 18 ஒன்று கூடுவோம்” என எழுதப்பட்டுள்ளது.

அதேவேளை ‘குருந்தி விகாரை’ முகநூல் பக்கத்திலும் குறித்த சுவரொட்டிகள் பகிரப்பட்டு பொங்கல் நிகழ்வை குழப்ப பாரிய திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/5dIkkZXp4sA

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு