மன்னார் மடு பிரதேசத்திற்கு உட்பட்ட கீரிசுட்டான் கிராமத்தில் இன்று (25) சீரற்ற காலநிலையால் மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி வயோதிப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் மன்னார் கீரிசுட்டான் கிராமத்தில் வசிக்கும் பத்மநாதன் தெய்வானை (வயது-62) என்ற வயோதிப பெண்ணே மரணமடைந்தவராவார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மடு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.