வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

Share

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்து கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று (18) தெரிவித்தனர்.

புத்தாண்டு தினத்தன்று இரவு 8.30 மணியளவில் வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்ற 8 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயார் மீது பம்மைமடுப் பகுதியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்கள் அணிந்திருந்தா 6 அரைப் பவுண் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் காசு என்பன கொள்ளையிடப்பட்டிருந்தன.

காயமடைந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் தாய் ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பூவரசன்குளம் பொலிசார் 30 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு