வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆலயத்தின் நிர்வாகத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயவளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா மாவட்டசெயலகம் வரை சென்றடையவுள்ளது.
எனவே பொதுஅமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப்பெரியோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்புக்களும் பேதங்களை மறந்து குறித்த பேரணியில், கலந்து கொண்டு மத ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கையினை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.