மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடம் பிடித்த நாடு

Share

மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்டு உள்ளது.

உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை முறையே 2, 3-ம் இடத்தைப் பிடித்துள்ளன.

அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கி உள்ளது.

தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு