தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ டி லோஸ் காப்ரெஸ் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.