உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஆட்சியாளர்கள்

Share

உயர்நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்து மிதிக்கும் நிலைக்கு நாட்டு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மறைத்து வருகின்றார்

தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போது, சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவிடம் கோரினார்.

சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகியவை இணைந்து செயல்பட்டாலும், நாட்டில் தற்போது சர்வாதிகார நிறைவேற்று அதிகாரமே ஆட்சிமுறையிலுள்ளது

அதன் மூலம் உயர்நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்து மிதிக்கும் நிலைக்கு நாட்டு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட சவாலுக்குட்படுத்துவதன் மூலம் அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மக்களின் வாக்குரிமைக்கு சவால் விடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு