தபால் மூல வாக்களிப்பு தள்ளிப்போகுமா?

Share

மார்ச் 28ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகள் தயாராக இருக்காது என்றும் வாக்குச் சீட்டு அச்சிடும் அட்டவணையை பேணுவதற்கு ஏற்கெனவே தாமதமாகிவிட்டது என்றும் அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆவணங்களை அச்சிடுவதற்கு தமது திணைக்களம் 500 மில்லியன் ரூபாயைக் கோரியுள்ள போதும் இதுவரை 40 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாகவும் அந்த நிதி போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் புதன்கிழமைக்குள் தேர்தலுக்காக 500 மில்லியன் ரூபாயும் மாத இறுதிக்குள் மேலும் 600 மில்லியன் ரூபாயும் எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

அடுத்த வாரத்தின் நடுப்பகுதிக்குள் நிதி கிடைக்காவிட்டால், தபால் மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகள் குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என’பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு