தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
குறிப்பாக மாநகர சபையில் மக்கள் எமக்கு பெரும்பான்மையினை வழங்க தவறி விட்டார்கள் அதைவிட எதிர்வரும் காலத்தில் யாழ் மாநகர சபையில் 25க்கும் மேற்பட்ட ஆசனத்தை பெற்று யாழ் மாநகர சபையினை பூரணமாக கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
எதிர்வரும் தேர்தலில் மாநகர சபையை தமிழரசு கட்சி பூரணமாக கைப்பற்றும் என்பதில் எந்தவிதமாற்று கருத்துக்கும் இடமில்லை மக்கள் எங்களுடன் தான் உள்ளார்கள் ஓரிருவர் கூறும் வார்த்தைகள் உண்மையாகிவிட முடியாது.
மக்களை ஏமாற்றி மாதச் சம்பளத்தை பெறுவதற்காக பின்வாசலால் கையெழுத்திட்டு சபை அமர்வுக்கு கலந்து கொள்ளாது விட்ட ஏனைய கட்சிகளின் கதைகளை கேட்பதற்கு நாம் தயார் இல்லை
ஏற்கனவே சூ.சிறில் பல வருடங்களுக்கு முன்னர் மாநகர சபையின் பிரதி முதல்வராக செயற்பட்டவர் அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் ஆளுமை மிக்கவர் அவ்வாறான ஒருவரைத்தான் இம்முறை எமது வேட்பாளராக தெரிவு செய்தோம்.
எனவே ஏனைய கட்சிகள் எமது கட்சியை பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள் என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் மக்கள் எமக்கு பூரண ஆணை வழங்கும் இடத்தில் சபையினை திறம்பட செயற்படுத்துவோம்” என்றார்.