பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மாவும், மெக் லானிங்கும் களம் இறங்கினர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லானிங் 32 பந்தில் 52 ரன் குவித்தார். மறுமுனையில் ஷபாலி வர்மா 18 ரன்னுக்கு அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய மாரிசேன் கெப் 16 ரன்னிலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லானிங் 70 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து ஆலிஸ் கேப்ஸி மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஆலிஸ் கேப்ஸி 21 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. டெல்லி தரப்பில் மென் லானிங் 70 ரன்னும் , ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்னும், ஜெஸ் ஜோனாசென் 20 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணியில் கேப்டன் அலிசா ஹீலி மற்று ஷெராவத் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இந்த ஜோடியில் ஷெராவத் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிரண் நவ்கிரே 2 ரன்னில் வெளியேறினார்.
மறுமுனையில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ஹீலி 24 (17) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக தாலியா மெக்ராத்துடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் தீப்தி சர்மா 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து மெக்ராத்துடன் தேவிகா வைத்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்துக் கொண்டிருந்தநிலையில் வைத்யா 23 (21) ரன்களில் கேட்ச் ஆனார்.
அவரைத்தொடர்ந்து மெக்ராத்துடன் சிம்ரன் ஷைக் ஜோடி சேர்ந்தார். இதனிடையே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்ராத் 36 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதியில் தனி ஆளாக போராடிய மெக்ராத் 90 (50) ரன்களும், சிம்ரன் ஷைக் 6 (4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.