உக்ரைனின் முக்கிய நகரத்தை கைப்பற்ற போராடும் ரஷியா

Share

உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அந்த வரிசையில் கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்ற கடந்த சில மாதங்களாக ரஷியா கடுமையாக சண்டையிட்டு வருகிறது.

அந்த நகரை நாலாபுறமும் சுற்றிவளைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷிய படைகள் தற்போது நகருக்குள் நுழைந்து விட்டன.

அவர்கள் நகரத்தை கைப்பற்றும் முனைப்பில் உக்ரைன் வீரர்களுடன் வீதிகளில் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகின்றனர்.

ரஷிய படைகளின் இடைவிடாத தாக்குதல்களில் பாக்முத் நகரம் நிலைகுலைந்துள்ளது. அங்கு வாழும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பாதுகாப்பு முகாம்களில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

அங்கு தாக்குதல்கள் தீவிரமாக இருந்தாலும் பாக்முத் நகரம் இன்னும் ரஷிய படைகளின் கைகளுக்கு செல்லவில்லை என அந்நகரின் மேயர் அலெக்சாண்டர் மார்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு