சந்தனத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா

Share

நல்ல வாசம் நிறைந்ததும், மருத்துவ குணம் கொண்டதுமான சந்தனம் சிவப்பு, மஞ்சள் சந்தனம் மற்றும் வெள்ளை சந்தனம் என மூன்று வகையாக கிடைக்கிறது.

20 கிராம் சந்தனபொடியை 300 மில்லி லீற்றர் நீருடன் காய்ச்சி மூன்று வேளைக்கு 50 மில்லி லீற்றர் குடித்து வந்தால் நீர்க்கோவை, மந்தம், இதய படபடப்பு குறையும்.

சந்தனத்தை அரைத்து எலுமிச்சை சாறுடன் கலந்து இரவில் உறங்கும் முன் கண்களில் தடவி வந்தால் கண் கட்டிகள் மறையும்.

சிவப்பு சந்தனத்தை அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவதால் தலைவலி குறைவதுடன், உடல் குளிர்ச்சி அடையும். சந்தன விழுதுடன் நெல்லிக்காய் சாறு கலந்து 40 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மதுமோகம் நீங்கும்.

கோடை கால கொப்புளங்கள், வேர்க்குறு மீது சந்தன கட்டைகளை அரைத்து தடவினால் குணமாகும். தயிருடன் சந்தனப் பொடியை சேர்த்து முகத்திற்கு தடவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு