3ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Share

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் முடிவொன்றை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் 3 ஆயிரத்து 100 அரச ஊழியர்கள், வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதற்காக அவர்கள் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளா்.

தேர்தல் நடக்காது என்ற தொனியில் ஜனாதிபதி நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். அப்படியானால் அரச ஊழியர்களின் நிலை என்ன?

ஒன்று அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு