வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (23) காலை வவுனியா வைத்தியசாலை நுழைவாயில் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், “முறையற்ற நியமனம் வழங்குவதை நிறுத்து”, “வாழ்வாதாரத்தை அதிகரி”, “வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தைக் குறை, “ஊழியர் பற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய்” போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் பேரணியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலிருந்து ஆரம்பமாகி சுற்றுவட்டத்தினூடாக ஏ – 9 வீதியிலுள்ள வைத்தியசாலையின் ஊழியர் நுழைவாயிலை வந்தடைந்து அதன் வாயிலில் முன்பாகக் கவனயீர்ப்பு இடம்பெற்றது.