மைத்திரி, தயாசிறிக்கு எதிராகத் தடை உத்தரவு!

Share

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஜா எல பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான சமீர பரணவித்தாரன மற்றும் சாமிக்கா ஹர்ஷனி சில்வா ஆகியோரைக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கி வேறு இருவரை உறுப்பினர்களாக நியமிக்கும் தீர்மானத்துக்கே இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது, கட்சியின் யாப்புக்கு முரணாகக் கட்சியிலிருந்து நீக்கி வேறு இருவரை நியமிக்கும் யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்டுள்ளது எனக் குறித்த இருவரும் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர்களின் கோரிக்கையை விசாரணை செய்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்குத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு