“கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை விட்டு நாட்டை விட்டுத் தப்பியோடாமல் விசேட தீர்மானம் மூலம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தெற்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘கோட்டாபய ராஜபக்சவின் வேண்டுகோளின் பிரகாரம் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவியை பாரமேற்று ஏன் அவரது திறமையைக் காட்டவில்லை?’ என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது,
“மக்கள் ஆணையின் ஊடாக வருகின்ற அதிகாரத்தைத்தான் சஜித் பிரேமதாஸ பாரமேற்பார் என்று இருந்தார். கோட்டாபய ராஜபக்ச அப்படிக் கூப்பிட்டு பிரதமர் பதவியைக் கொடுக்கத் தேவை இல்லை.
கோட்டாபய நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும்; அவர் ஜனாதிபதி பதவியை விட்டு நாட்டை விட்டு ஓடியிருக்கத் தேவையில்லை.
விசேட தீர்மானம் மூலம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி அதில் சஜித் அணி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் ஆட்சியைக் கொண்டு நடத்தி இருப்பார்.
அப்படி இல்லாமல் கோட்டாபயவின் தலைமைத்துவத்தின் கீழ் எப்படிப் பிரதமராக இருப்பது?” – என்றார்.