நீரில் மூழ்கும் இடங்களை கண்டறியும் செயலி அறிமுகம்

Share

மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சு இனங்கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

நாட்டில் வருடாந்தம் 800 முதல் 1000 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் ஒரு மாதத்திற்குள் 500க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மக்கள் நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் சுகாதார அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு