நாட்டின் தற்போதைய நிலையில் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தை வைத்தியர்கள் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதியுறுகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார செயலாளரும், நிபுணருமான வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவற்றுள் மற்றுமொரு குழு வெளிநாட்டு பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும்
வெளிநாட்டு உதவிக்கு சென்ற சில வைத்தியர்கள் தற்போது வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அண்மைக்காலமாக விசேட வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.